Wednesday, May 16, 2012

இன்றைய கல்வி முறை





தன் குழந்தையை வழக்கம் போல் வேடிக்கை காட்ட, இன்று Airport வாசலில். நேர்மை, உண்மை, உழைப்பு ஆகிய குணங்கள் குழந்தைகளுக்கும் வரவேண்டுமெனும் ஆர்வம். இதுவரை பயணம் செய்யாததால் விமானம் பார்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. மிகவும் அவசரமாக காரில் வந்த ஒரு குடும்பம், தவறுதலாக குறுக்கே வந்த தன் குழந்தையை "தள்ளிப் போ" என, உச்ச கோபத்தையும், மன வருத்தத்தையும் அப்போது வெளிக்காட்ட முடியவில்லை. ஆதங்கத்தில் தன் நண்பனிடம் பிறகு சொல்ல "அட விடுப்பா.... பணம் பண்ற வேலை, நீயும் சம்பாதி.. அப்ப தெரியும்". அடுத்து வந்த சில வருடங்களில் தன் கொள்கைகளை long term fixed deposit செய்து, தன் கோபத்தையும், மன வருத்தத்தையும் பணமாக பரிமாற்றம் செய்து, மகனை மேல்நாட்டிக்கு படிக்க அனுப்புவதற்காக, Airport வாசலில். "சீக்கரம்.. சீக்கரம்...நான் அப்பவே சொன்ன.... வீட்டுல கும்புட்டது போதும் கோயிலுக்கு போன லேட் ஆகும்னு...கேட்டாதானே" வேக வேகமாய் பெட்டியுடன் ஓட, இடையில் வந்த ஒரு குழந்தையை "அட தள்ளுப்பா". Security Check முடிந்து, கிளம்பும்போது நிம்மதியுடன் கையசைக்க........

தள்ளிப் போ தாங்கமுடியாத நாம் அதையே பின்நாளில் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது. இது தவறா? சரியா?

பேருந்தில் முதியவர்களுக்கு எழுந்து சீட் கொடுக்காததும், சுவிஸ் வங்கியில் கோடிகளை குவிப்பதும் மற்றவர்களை நாம் மறப்பதாலும், உதவ மறுப்பதாலும் விழை(ளை)கின்றது. இரண்டுக்கும் SCALE மட்டும் தான் வேறு. முன்னது MICRO ERROR, பின்னது MACRO CRIME. பதிவை எழுதியவரும், படிப்பவரும் இந்த இரு புள்ளிகளுக்கு இடையே எங்காவது இடம் பெற்றுவிடுகின்றனர்.

சிலர் ME பக்கத்தில், சிலர் MC பக்கத்தில் (நம்மால ஏன் MC பக்கத்துல போக முடியமாட்டேங்குது). இந்த இந்தியன் விளைவு நம் வாழ்வின் அனைத்து சமாச்சாரங்களிலும் விளையாட ஆரம்பித்துவிட்டது. விவசாயம், தொழில், கல்வி, அரசாங்கம், சமுதாயம், அறிவியல், குடும்பம், மருத்துவம், மற்றும் பல

கல்வியை பார்ப்போம்

சட்ட விரோதமாக பணம் கொடுக்க அல்லது வாங்க மறுக்கும் எவரும் இன்று பாட சாலைகள் நிறுவ முடியாது. (அவசரப்பட்டு நிறுவ வேண்டாம் என வேண்டாம்). இவ்வாறு விதிகள் தளர்த்தி முளைக்கும் கல்வி நிறுவனங்கள், பணத்தை சம்பாதிக்கவும் தளர்த்துகின்றது, விளைவு கல்வித்தரக்குறைவு. சமீபத்தில் பள்ளியே மாணவர்களுக்கு 'பிட்' கொடுத்தது ஒரு நல்ல உதாரணம்.

பத்தாவது படிக்கும் போது எட்டாவது பெண்ணுக்கு லெட்டர் கொடுத்து, அடி வாங்கி, நிமிர்ந்து நடந்த நம் மாணவன், ரிசல்ட் பார்த்ததும் தற்கொலைக்கு முயல்கிறான். இதற்கு காரணம் படிப்பில் ஆர்வமா?, சுற்றியிருப்பவர்களின் தொல்லையா?, மன உறுத்தலா?. எது எப்படியாயினும் இதை தடுத்து நிறுத்த நாம் இப்போது பின்பற்றும் தற்காலிக(?) வழி 'அனைவரும் பாஸ்'. விளைவு ..கு.

பெற்றோர்கள் எதோ ஒரு வகையில் பங்களிக்கின்றனர். நல்ல பள்ளிகளை அடையாளம் காணவும், அளவிடவும் முடியாமல் இருப்பது. நல்ல பழக்கவழக்கங்களை விட மார்க்குகளை மதிப்பது. (பொதுவாக வீடுகளில் நூலகம் இல்லை - video game உண்டு). இன்று அதிக மதிப்பெண்ணும், கேம்பஸ் Interview-ல் வேலையும் கிடைத்தால் போதும் எனும் உயரிய நோக்கத்துடன் பிள்ளைகளை வளர்க்க, அது இவர்களை முதியோர் இல்லத்திற்கும், மகனை வசதியான வாழ்க்கைக்கும் அனுப்புகிறது. வழக்கம்போல் இது வெற்றி எனப்படுகிறது. கல்வி வாழ்கையின் அர்த்தத்தை அழித்து, வசதியை பெருக்குகின்றது.

30 ஆண்டுகளுக்கு முன்னால் இளங்கலை பட்டம் பெற்ற ஒருவரது அறிவு இன்று முதுகலை பட்டம் பெரும் ஒருவருக்கு வருவதில்லை. 9.1 CGPA வாங்கிய ஒருவர் நேர்காணலில் கேட்கும் கேள்விகளுக்கு புன்னகையை பதிலளிக்கிறார். இந்தியாவின் கல்வி முறை, தொழில் துறை மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து பெரிதும் மாறுபடுவதும் மற்றுமொரு கொடுமை.

நாமும், கல்வி முறையும் நிச்சயம் மாறவேண்டும், அனால் எப்படி?

நேற்று பஞ்சர் ஆன வண்டியை சரி செய்து மகிழ்ச்சியுடன் (இந்தவாட்டியும் டுயுப் மாத்தலையே) செல்லும்போது நான் கண்டது, ரோட்டோரத்தில் ஒரு கணவனும், மனைவியும் சண்டையிட்டுக்கொள்ள, சரி இது நம் பாரம்பரிய விளையாட்டுதானே என செல்ல முயலும்போதுதான், அந்த பெண்மணியுடன் இருந்த அவளது பெண் பிள்ளையை பார்த்தேன். எப்போதும் காமெடி கலந்த என் மூளையின் நியுரான்கள் வருத்தப்பட்டன. சமுதாயத்தையும், வாழ்க்கையும், தன் பெற்றோர்களின் சண்டையையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறுமியின் மனது நிச்சயம் குழப்பமும், வருத்தமும் நிறைந்திருக்கும்.

குழப்பமும், வருத்தமும் முறையே சிகரெட், மது போன்றது. தனியாக ஏற்படுத்துவதைவிட ஒன்றுசேர்ந்தால் பலமடங்கு தீங்கை ஏற்படுத்தும். அந்த சிறுமியின் மனபலம் நிச்சயம் பாதிப்படையும். சில சமயம் வலிமையையும் பெறலாம். ("டேய் தம்பி ராகிங் பண்றதே உன்னை தைரியமா ஆக்கரதுக்குதாண்டா"-பல ஆண்டுகளுக்கு முன் சீனியரின் ஆறுதல் மொழி). மன வலிமை இதுபோல் வளர்வது மனதுக்கு வலித்தது.

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து : இன்றைய கல்வி முறையில் தேவையான மாற்றம்)


No comments:

Post a Comment